Skip to main content

காஷ்மீரி மொழியை நீக்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவுக்கு கடும் எதிர்ப்பு!

Published on 08/12/2018 | Edited on 08/12/2018
kashmiri

 

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் மொழிகள் ஊக்குவிப்பு இணையதளத்தில், காஷ்மீரி மொழிபெயர்ப்புகளை நீக்க காஷ்மீர் பண்டிட்டுகள் சிலர் பரிந்துரை செய்திருப்பதற்கு, பந்திப்போரா இலக்கிய அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 

காஷ்மீரி மொழிக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் எல்லாவகையிலும் கடுமையாக எதிர்த்து போராடுவோம் என்று அந்த அமைப்பின் தலைவர் சூஃபி சவ்கத் தெரிவித்துள்ளார். பண்டிட் வகுப்பிலிருந்து விலைக்கு வாங்கப்பட்ட சில உறுப்பினர்களின் அரசியலுக்காக காஷ்மீரி மொழியின் புனிதத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

பாஷா சங்கம் என்ற மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் பாரசீக எழுத்துக்களை பயன்படுத்தி எழுதப்படும் காஷ்மீரி மொழிக்கு பதிலாக, 8 ஆம் நூற்றாண்டில் தோன்றிய, சமஸ்கிருத தாக்கம் அதிகமுள்ள ஷர்தா எழுத்துமொழியை பண்டிட்டுகள் ஆதரித்துள்ளனர். பாரசீக எழுத்துகள், முஸ்லிம்கள் உருது மொழியை எழுதுவதுபோல வலமிருந்து இடமாக எழுதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

மத்திய அரசு காஷ்மீரிகளின் மன உணர்வுகளை புரிந்துகொள்ள மறுக்கிறது என்பது மீண்டும் நிரூபணமாகிறது என்று அவாமி இட்டேஹட் தலைவர் ரஷீத் கூறியிருக்கிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மும்மொழிக் கொள்கைக்கு ஒருபோதும் வாய்ப்பில்லை” - தமிழக அரசு

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
govt has announced that only the bilingual policy will continue in Tamil Nadu

தமிழக முதல்வர் ஸ்டாலின்  தனது சமூக வலைத்தள பக்கத்தில் கணினிக் கல்வியைப் பயிற்றுவித்ததில் முன்னோடி மாநிலமாக விளங்கியதைப் போல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும் முதல் மாநிலமாகப் பயிற்றுவிக்கிறோம் என்று பதிவிட்டிருந்தார்.

இதனைக் குறிப்பிட்டு தனது எக்ஸ் தளத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக சார்பில் கொண்டு வரப்பட்ட புதிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகச் செயற்கை நுண்ணறிவை சேர்த்தற்காகத் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச அரசு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் தனது அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பாடத் திட்டத்தில் அமல்படுத்துவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழக அரசும் அத்திட்டத்தை  மேம்படுத்துவது பாராட்டுக்குரியது. பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் படிப்படியாகத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டு மும்மொழிக் கொள்கையும் தமிழ அரசு விரைவில்  கொண்டுவரும் என்று நம்பிக்கை இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் அண்ணாமலையின் கருத்தை மறுத்துள்ள அரசு, தமிழகத்தில் இரு மொழி கொள்கை மட்டுமே தொடரும் எனத் தெரிவித்துள்ளது. “தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்; மும்மொழிக் கொள்கைக்கு ஒருபோதும் வாய்ப்பில்லை. பெரியார் காட்டிய வழியில் தமிழ்நாடு அரசு முற்போக்குப் பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும். அண்ணாமலை பகல் கனவு காண்பது போல் மும்மொழிக் கொள்கை ஒருபோதும் உருவாக வாய்ப்பில்லை. தேசியக் கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு செயல்படுகிறது என்று சொல்வது நகைப்புக்குரியது. தகவல் தொழில்நுட்பம் குறித்து தமிழ்நாட்டிற்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது. 

Next Story

வணிக வளாகங்கள் மீது தாக்குதல்; பெங்களூரு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
kannada name issue on shopping malls Strong security throughout Bengaluru!

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் 60% பரப்பளவு கன்னடத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து கடைகளின் பெயர்ப் பலகைகளும் ஆய்வு செய்யப்படும். எந்தெந்த கடைகளின் பெயர்ப் பலகைகளில் 60% கன்னடம் இல்லையோ, அந்த கடைகளுக்கு அறிவிக்கை வழங்கப்படும்.

மேலும் கடைகள் தங்களின் பெயர்ப் பலகைகள் 60% அளவுக்கு கன்னடத்தில் எழுதப்பட்டிருப்பதைப் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் உறுதி செய்து சம்பந்தப்பட்ட மண்டல ஆணையர்களிடம் கடிதம் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறிய கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்திருந்ததது.

இந்நிலையில் அனைத்து வணிக வளாகங்களிலும், கன்னடத்தில் பெயர்ப் பலகை வைக்க வலியுறுத்தி கன்னட ரக்‌ஷண வேதிகா என்ற அமைப்பினர் பெங்களூரு எம்.ஜி.ரோடு, லால்லி ரோடு, விமான நிலைய சாலை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தினர். அப்போது கன்னடத்தில் பெயர்ப் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். கன்னடத்தில் பெயர்ப் பலகை வைக்காத வணிக வளாகங்களின் முன் உள்ள பெயர்ப் பலகைகள், அறிவிப்பு விளம்பர பதாகைகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பெங்களூருவில் உள்ள பிரபல வணிக வளாகங்கள் (மால்கள்) மூடப்பட்டன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.