காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து காஷ்மீரில் சமீப காலத்தில் இல்லாத வகையில் 90 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். எங்கு பார்த்தாலும் ராணுவ வீரர்கள் ரோந்து பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருவது, மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.