ஹஜ் யாத்திரை செல்வதற்காகச் சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை கரோனா தடுப்பு நிதிக்காக வழங்கியுள்ளார் காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஒருவர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fsdfs.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், 35,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1251 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் காஷ்மீரைச் சேர்த்த இஸ்லாமியப் பெண் ஒருவர் ஹஜ் பயணத்திற்காக நீண்ட காலமாகச் சேமித்து வைத்திருந்த பணத்தை கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கியுள்ளார்.
காஷ்மீரைச் சேர்ந்த கலிதா பேகம் என்ற 87வயது பெண் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக நீண்ட காலமாகப் பணம் சேர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் அசாதாரணமான சூழல் நிலவி வருகையில், இந்த பணத்தைக் காஷ்மீரில் கரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளத் தானமாக வழங்கியுள்ளார். காஷ்மீரில் பெண்களுக்கான கல்வி முறையாகக் கிடைக்காத காலகட்டத்திலேயே, பள்ளிச்சென்று படித்த கலிதா, பெண்கள் முன்னேற்றம் தொடர்பாகப் பல்வேறு சமூக நலப்பணிகளையும் மேற்கொண்டு வந்தவர் ஆவார். அந்தவகையில் தற்போதும் மக்களுக்கு உதவும் வண்ணம் தனது சேமிப்பு பணத்தை அவர் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கியுள்ளார். காஷ்மீரில் மக்கள் நலப்பணியில் ஈடுபட்டு வரும் சேவா பாரதி என்ற அமைப்புக்கு அவர் இந்த நிதியை அளித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)