Advertisment

இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிவதா ?? -பாஜக தலைவர் அமித்ஷா

amitsha

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க பாஜகஎன்றும் துணை போகாது, அனுமதிக்காது என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சி பாஜகவின் கூட்டணி விலகளால் கலைக்கப்பட்டு தற்போது ஆளுநர் ஆட்சி நடந்து வருகின்றது.

Advertisment

காஷ்மீர் போர் நிறுத்த கொள்கையில் முரண்பாடுமற்றும் காஷ்மீரில் இயங்கி வந்த ரைசிங் காஷ்மீர் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் கொலை போன்ற காரணங்களால் மஜக கூட்டணியில் இருந்து பாஜக விலகுகிறது என காஷ்மீர் பாஜக மாநில பொறுப்பாளர் அறிவித்ததை தொடர்ந்தே பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமலானது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இந்த கூட்டணி முறிவுமுடிவு மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில்தான் நடந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின் நேற்று காஷ்மீர் சென்ற பாஜக தலைவர் அமித்ஷா காஷ்மீரில் நடந்தவிழாநிகழ்ச்சியில்இந்த கூட்டணி முறிவுக்கான காரணம் பற்றி பேசும்பொழுது, மோடியின் அரசு காஷ்மீரின் வளர்ச்சிக்கு அதிக நிதியுதவி வழங்கி வந்தது.ஜம்மு,லடாக், காஷ்மீர் பள்ளத்தாக்கு என அனைத்து பகுதிகளுக்குமான வளர்ச்சியை வேண்டியே பாஜக மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்தது ஆனால் அரசு ஜம்மு மற்றும் லடாக்கை புறக்கணித்து செயல்பட்டதன் விளைவே இந்த கூட்டணி முறிவுக்கு காரணம்.

அதிகாரம் முக்கியமல்ல மாநிலத்தின் சமமானவளர்ச்சிதான் முக்கியம். இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரிக்க முடியாது பிரிக்கவும் பாஜக அரசு அனுமதிக்காது என கூறிய அமித்ஷா தொடர்ந்து பாஜக தலைவர்கள் மீது சர்ச்சை விமர்சனங்களை வைத்துவரும் ராகுல் காந்தி கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறினார்.

Amit shah jammu and kashmir
இதையும் படியுங்கள்
Subscribe