Advertisment

காஷ்மீரில் உச்சக்கட்ட பரபரப்பு...மாணவர்கள் உடனடியாக சொந்த ஊர்களுக்கு திரும்ப காஷ்மீர் மாநில அரசு உத்தரவு!

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் உடனடியாக விடுதியை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு செல்லுமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தல். அதே போல் வெளியில் விடுதி எடுத்து தங்கி பயிலும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் உடனடியாக சொந்த ஊர்களுக்கு திரும்ப அம்மாநில அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, மாதா யாத்திரை என்றழைக்கப்படும் துர்க்கையம்மன் யாத்திரையும் நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

kashmir issues college and university students immediately going to native place

மேலும் காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். காஷ்மீர் மாநிலத்தில் விமானப்படை மற்றும் தரைப்படை தயார் நிலையில் உள்ளது. ஸ்ரீநகரில் உள்ள விமான தளத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் அமர்நாத் யாத்ரீகர்கள் அழைத்து செல்லும் வகையில் விமானங்களும் தயார் நிலையில் உள்ளனர். பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களில் பயிற்சி பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த 15 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் உடுருவ முயற்சி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

college students vacate at native HIGH ALERT India issues jammu and kashmir places
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe