காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்கி ஆகஸ்ட் 6-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முமுவதும் எதிர்கட்சிகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்தநிலையில் காஷ்மிரில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அடக்கு முறையும் அமல்படுத்தப்பட்டதால் இது ஜனநாயகத்துக்கு எதிரானது காஷ்மீரில் வாழும் மக்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லை என்று சொல்லி கேரளா கோட்டயத்தை சேர்ந்த 34 வயதான ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் தனது பதவியை ராஜினாமா செய்து ஐஏஎஸ் வட்டாரம் மட்டுமல்லாமல் நாடு முமுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

Advertisment

kashmir issue

2012- ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சியில் இந்தியா அளவில் 59 ஆவது இடம் பிடித்த கண்ணன் கோபிநாத் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி துறை செயலாளராக பணிபுரிந்து வந்தார். அவர் ஆகஸ்ட் 21-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினார்.

மேலும் அவர் "என் கருத்துரிமையை மீண்டும் நான் பெற விரும்புகிறேன். ஒரு நாளாவது நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன். காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டியிருக்கின்றன. அந்த மக்கள் தங்கள் உரிமையை இழந்து நிற்கிறார்கள்.

Advertisment

நான் நிறைய நம்பிக்கையோடு இந்திய ஆட்சி பணிக்கு வந்தேன். குரலற்றவர்களின் குரலாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் வந்தேன். ஆனால் இங்கே என் குரலை நான் இழந்து விட்டேன்" என்றார் கண்ணன் கோபிநாத். இந்தநிலையில் அவரின் ராஜினாமா கடிதத்தை மத்திய அரசு ஏற்கும் வரை அவர் அந்த பணியில் இருந்து அரசு கொடுத்த பணிகளை செய்து முடிக்க வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டியிருந்தது. ஆனால் கண்ணன் கோபிநாத் அதற்குள் வெளியேறி விட்டார்.

இந்தநிலையில் அகில இந்திய சிவில் சர்வீஸ் சட்டம் 1968 விதி 8ன் படி அரசின் கொள்கைக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரியான கண்ணன் கோபிநாத் கருத்து தெரிவித்ததாக கூறி அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு 15 நாட்களில் விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் ழூலம் கண்ணன் கோபிநாத் மீது ஒழுங்கு நடவடிக்கையும் பாயும் என்று கூறப்படுகிறது.