Skip to main content

கவ்ரா சவுத் நோன்பில் கணவனை புரட்டி எடுத்த மனைவி; வைரலாகும் வீடியோ

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

karwa chauth day wife assaults husband in ghaziabad

 

கணவரின் நலன் வேண்டி நாடு முழுவதும் நேற்று முன்தினம் கவ்ரா சவுத் விரதம் அனுசரிக்கப்பட்டது. இந்த கவ்ரா சவுத் விரதத்தில் பெண்கள் உணவு உண்ணாமல், விரதம் இருந்து தீபம் ஏற்றி சல்லடையில் நிலவு பார்த்து, பின்பு அந்த சல்லடையில் தங்களின் கணவனை பார்ப்பார்கள். இதனால் தங்களின் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்று வழிவழியாக நம்பி வருகின்றனர். 

 

கணவன் மார்கள், நலமாக இருக்க வேண்டும் என்று பெண்கள் பூஜையை செய்து வரும் அதே தினத்தில் தான் கணவனை விரட்டி விரட்டி மனைவி புரட்டி எடுத்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் மனிஷ் திவாரி, தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதில் அவரது மனைவி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மனிஷ் திவாரி, வேறு ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். 

 

karwa chauth day wife assaults husband in ghaziabad

 

இந்நிலையில் மணிஷ் திவாரி, அந்த பெண்ணுடன் காசியாபாத்தில் உள்ள சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சந்தைக்கு மணிஷ் திரியின் மனைவி மற்றும் அவரது தாய் இருவரும் வந்துள்ளனர். அப்போது தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை பார்த்து கோபமடைந்த அவரது மனைவி, சாலையிலேயே கணவரை லேட் ரைய்ட் வாங்கினார். இதை மணிஷ் திவாரியுடன் வந்த பெண் தடுக்க வர, அவரையும் கடுமையாக தாக்கினார். தன்னுடன் வந்த பெண்ணை அடித்ததும், அதுவரை அடிவாங்கி வந்த மணிஷ் திவாரி,  பதட்டமடைந்து, அவரது மனைவி மற்றும் அவரது தாயிடமிருந்து தனது பெண் தோழியை பாதுகாக்க முயற்சித்தார்.  ஆனால் அதையும் மீறி பல அடிகள் விழுந்தன. அதுமட்டுமின்றி சாலையில், நின்று  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சிலர் தடுக்க வந்தபோது, மணிஷ் திவாரியின் மனைவி விவரத்தை சொல்ல, அவர்களும் சேர்ந்து மணிஷ் திவாரியையும், அவரது பெண் தோழியையும் தாக்கினர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட, அது தற்போது வைரலாகி வருகிறது. 

 

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்ய, மணிஷ் திவாரியின் மனைவி தனது கணவர் மீது புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடித்து வருகின்றனர். 

 

கணவர் நலன் வேண்டி மனைவிமார்கள் நோன்பிருந்து பூஜை செய்யும், அதே நாளில் மணிஷ் திவாரியை, அவரது மனைவி புரட்டி எடுத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மனைவி இறந்த செய்தியைக் கேட்ட அடுத்த நொடியே உயிரிழந்த கணவன்!

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
 husband passed away the second he heard the news of his wife lost their life

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வயது முதிர்ந்த தம்பதியினர் ராஜா(65), ஜோதி(60). இவர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு  2 ஆண் மற்றும் ஒரு பெண் என 3 பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மனைவி ஜோதி கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த இந்நிலையில் நேற்று ஜோதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட அவரது கணவர் ராஜா அடுத்த நொடியே வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

ad

இந்த தகவல் அறிந்த கிராம மக்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று இருவர் உடலுக்கும் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மிகவும் பாசமாக வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதியினர் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.