அவர்கள் யாரென்றே தெரியாது... ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்திக் சிதம்பரம்...

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ நேற்று கைது செய்தது.

karti chidambaram about inx media case

ப.சிதம்பரம் கைதினை தொடர்ந்து அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கவும், பாஜக அரசின் மீதான விமர்சனங்களை திசைதிருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்வதற்கான எவ்வித சட்ட முகாந்திரமும் இல்லை. என் வாழ்நாளில் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜியை பார்த்ததில்லை. நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர்களின் நிறுவனத்துடன் நான் தொடர்பு வைத்திருந்ததில்லை. என்னை விசாரணைக்கு சிபிஐ அழைத்துச் சென்ற போதுதான் இந்திராணி முகர்ஜியை பார்த்தேன். மற்றபடி அவர்களுக்கும் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை” என்று கூறினார்.

INX media Karti Chidambaram
இதையும் படியுங்கள்
Subscribe