கடந்த 2007- ம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

Advertisment

karthik chidambaram income tax case update

இந்த வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என நேற்று டெல்லி நீதிமன்றம் அறிவித்தது. இது தொடர்பாக தற்போது சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீதான வருமானவரி வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் மறுத்துள்ளது.