Advertisment

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது!

Karthi Chidambaram

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் நிறுவனங்களில் நேற்று சிபிஐ போலீசார் 5 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். சென்னை, மும்பையில் தலா மூன்று இடங்களிலும், கர்நாடக, பஞ்சாப், ஒடிசாவில் தலா ஒரு இடமும் என மொத்தம் 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை சீனர்கள் இந்தியா வருவதற்கு சட்டவிரோதமாக 260 விசாக்கள் கார்த்திக் சிதம்பரத்தின்நிறுவனம்மூலம் தரப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்காக பணம் பெறப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே 50 லட்சம் பெற்றுக்கொண்டு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Advertisment

இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ போலீசார் தற்போது கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

CBI
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe