ADVERTISEMENT

சீனர்களுக்கு விசா வாங்கித் தர லஞ்சம்- கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு! 

05:31 PM May 17, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகனும், சிவகங்கை மக்களவை தொகுதியின் உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என சென்னை, டெல்லி, மும்பை. ஒடிஷா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட 10 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை (17/05/2022) முதலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் நகல் தற்போது வெளியாகி உள்ளது. அதில், பஞ்சாப் நிறுவனத்தில் பணியாற்ற 250 சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு ரூபாய் 50 லட்சம் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றுள்ளார். ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில் முறைகேடாக விசா பெறப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் கார்த்தி சிதம்பரத்தின் பெயர் இரண்டாவது நபராக இடம் பெற்றுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் பாஸ்கர ராமன் என்பவரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT