Skip to main content

கர்நாடகாவின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021

 

basavaraj bommai

 

கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்வார் என நீண்டநாட்களாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் கடந்த 26ஆம் தேதி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையைக் கலைத்து அம்மாநில ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.

 

இதன்பிறகு, கர்நாடகாவின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பசவராஜ் பொம்மை, கடந்த 28ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இருப்பினும் அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இந்நிலையில், இன்று (04.08.2021) புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர், "புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா இன்று மதியம் 2.15 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும். புதிய அமைச்சர்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் விவாதித்தோம். பதவியேற்கவிருக்கும் அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் எங்களுக்கு கிடைக்கும்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மீண்டும் பாஜகவிற்கு செல்வேன்” - ஈஸ்வரப்பா திட்டவட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Eshwarappa says I will go back to BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அந்த வகையில், பா.ஜ.க - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். மேலும், முதற்கட்டமாக நடைபெறும் 14 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் கடந்த 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து, அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், கர்நாடகா மாநில முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ.கவின் மூத்த தலைவருமான கே.எஸ். ஈஸ்வரப்பா, ஹவேரி மக்களவைத் தொகுதியில் தனது மகன் கே.ஈ. கந்தேஷ் போட்டியிட பா.ஜ.க தலைமைக்கு வாய்ப்பு கோரியிருந்தார். ஆனால், அம்மாநில பா.ஜ.க தலைவர் பி.ஓய். ராகவேந்திரா, அந்த வாய்ப்பை வழங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கட்சி மீது அதிருப்தியில் இருந்த கே.எஸ். ஈஸ்வரப்பா, இந்த விவகாரம் குறித்து கட்சி மேலிடத்தில் புகார் அளித்தார். ஆனால், அதுவும் பயனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, ராகவேந்திரா போட்டியிடும் சிவமோகா தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக கே.எஸ். ஈஸ்வரப்பா அதிரடியாக அறிவித்தார். இதனையடுத்து மீதமுள்ள 14 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. இந்த வேட்புமனு தாக்கலானது கடந்த 19ஆம் தேதி வரை நடைபெற்றது. அப்போது கே.எஸ். ஈஸ்வரப்பா, ராகவேந்திரா போட்டியிடும் சிவமோகா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார். இத்தகைய செயல் பா.ஜ.க.வினர்  மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. 

Eshwarappa says I will go back to BJP

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு தராததால் சுயேச்சையாக போட்டியிட்ட கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் கே.எஸ். ஈஸ்வரப்பாவை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. ஷிவமோகா தொகுதியில் பாஜக வேட்பாளர் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவிக்கையில், “கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளேன். இன்னும் நம்பிக்கை உள்ளது.  கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டத்திற்குப் பயப்படவில்லை. இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் பா.ஜ.க.வுக்கு செல்வேன். 5 முறை தாமரை சின்னத்தில் போட்டியிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

மனைவி கண்முன்னே பாலியல் வன்கொடுமை; திருமணமான பெண்ணின் பரபரப்பு புகார்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
A married woman's sensational complaint on Incident happened in front of wife

கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், 28 வயது திருமணமான பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரில், ‘ரஃபீக் என்பவர் அவரின் மனைவியின் கண்முன்னே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும்’ புகார் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பெலகாவி போலீசார் தெரிவிக்கையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2013ஆம் ஆண்டில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டின் போது, ரஃபீக் என்பவர், அந்த மளிகை கடைக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கும் ரஃபீக்குக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தெரியவர, தனது மனைவியை கண்டித்துள்ளார். இதில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றில் கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது மனைவியுடன் ஒரே வீட்டில் தங்க தொடங்கியுள்ளார். ஆனால், அங்கு, குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவிக்கு முன்னால் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் குங்குமம் வைப்பதற்கு பதிலாக பர்தா அணியுமாறும், ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்யுமாறும் அந்த தம்பதியினர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணின் கணவரை விவாகரத்து செய்து, இஸ்லாம் மதத்துக்கு மாறி அவர்களுடன் வாழவில்லை என்றால், தனது அந்தரங்க புகைப்படங்களை குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் பரப்பி விடுவதாகவும் ரஃபீக் மிரட்டியுள்ளார்’ எனத் தெரிவித்தனர்.

அவரது புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 376, 503, கர்நாடகா மத சுதந்திர உரிமைச் சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ரஃபீக் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.