/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aS_0.jpg)
கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்வார் என நீண்டநாட்களாகதகவல்கள் வெளியான நிலையில், அவர் கடந்த 26ஆம் தேதி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்துஎடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையைக் கலைத்துஅம்மாநில ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.
இதன்பிறகு, கர்நாடகாவின்புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டபசவராஜ் பொம்மை, கடந்த 28ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இருப்பினும் அவருடன்அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இந்நிலையில், இன்று (04.08.2021) புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "புதிய அமைச்சர்களின்பதவியேற்பு விழா இன்று மதியம் 2.15 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும். புதிய அமைச்சர்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் விவாதித்தோம். பதவியேற்கவிருக்கும்அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில்எங்களுக்கு கிடைக்கும்" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)