/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/asf_3.jpg)
கர்நாடக மாநில பாஜகவில் நீண்டநாட்களாக உட்கட்சி பூசல் நிலவிவருகிறது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக, கட்சியில் உள்ளவர்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் எடியூரப்பாவின் பதவி பறிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே பாஜக மேலிட பொறுப்பாளர் அருண் சிங், எடியூரப்பா அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தினார்.
இருப்பினும் அதிருப்தி ஓயவில்லை. இந்தநிலையில் எடியூரப்பா, தனத மகன் விஜயேந்திராவுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். மாநில விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டாலும், எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின.ஆயினும், அடுத்த நாள் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேசிய எடியூரப்பா, தான் பதவி விலகப்போவதாக வெளியான தகவல்களைத் திட்டவட்டமாக மறுத்தார்.
இருப்பினும் பிரதமருடனான சந்திப்பில்எடியூரப்பா, தனது உடல்நிலையைக் காரணம் காட்டி பதவி விலக முன்வந்ததாகவும், அதற்குப் பதிலாக தனது மகனுக்கு மாநில பாஜகவில் முக்கிய பதவி வழங்க வேண்டும் என கேட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும், எடியூரப்பாவின் ராஜினாமாவை ஏற்பது குறித்து பாஜக மேலிடம் விரைவில் முடிவெடுக்கும் எனவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன் எடியூரப்பா, வரும் 26ஆம் தேதிக்குப் பிறகு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா எடுக்கும் முடிவைப் பின்பற்றுவேன் என தெரிவித்தார். இந்தநிலையில் இன்று (26.07.2021) எடியூரப்பா தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். மத்திய உணவிற்குப் பிறகு ஆளுநரை சந்திக்கவுள்ளதாகவும் எடியூரப்பாதெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)