Skip to main content

"காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அநீதி"- குமாரசாமி பேட்டி

Published on 23/06/2018 | Edited on 23/06/2018

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. காவிரி ஆணையத்தின் தலைவராக மசூத் ஹூசைன் நியமிக்கப்பட்டார். மேலும் இதற்கான உறுப்பினர்களும் நியமிக்கபட்டுள்ளனர்.
 

KAUVERY

 

 

 

காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஆணையம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதனையடுத்து இந்த ஆணையத்திற்கும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றிற்கான தலைவர்களையும், உறுப்பினர்களையும் மத்திய அரசு அறிவித்து, நேற்று இதற்கான அரசாணையை வெளியிட்டது.  

 

 

 

ஆனால், கர்நாடக அரசு இதுவரை தனது உறுப்பினர்களை நியமிக்கவில்லை. அதுபோல இதுவரை கர்நாடக அரசு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவுக்கான தனது உறுப்பினர்களையும் நியமிக்கவில்லை. இதுகுறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,"காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆணையத்தில் உள்ள சில சிக்கல்களுக்கு தீர்வுகாண வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டிருந்தோம். ஆனால், மத்திய அரசு கர்நாடகாவை புறக்கணித்து நடவடிக்கை எடுத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடகா சட்ட ரீதியாக போராட்டம் நடத்தும்" என்று குமாரசாமி கூறியுள்ளார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்