Advertisment

உங்களுக்குதானே ஓட்டு போட்டோம்... வீடு எங்கே? சரமாரியாக கேள்வி எழுப்பிய மூதாட்டி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையாவிடம் மூதாட்டி ஒருவர் உங்களுக்கு ஓட்டு போட்டோமே வீடு தருவதாகச் சொன்னீர்களே வீடு எங்கே? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

viral incident in karnataka

கர்நாடகாவின் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள இடர்பாடுகளில்இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர், 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளைகர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா பார்வையிட்டார். அப்போது காரில் அமர்ந்திருந்தசித்தராமையாவிடம் மூதாட்டி ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பினார். உங்களுக்கு வாக்களித்தால் தங்குவதற்கு வீடு தருவதாக சொன்னீர்களே நாங்கள் உங்களுக்கு ஓட்டு போட்டு விட்டோம் ஆனால் வீடு இன்னும் வரவில்லையே என கேட்டு வாக்குவாதம் செய்தார். மேலும் எங்களுக்கு வீடு கொடுக்கப் போவது யார் என சரமாரியாககேள்வி எழுப்பினார்.

Advertisment

viral video sitharamaiya congress karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe