Advertisment

குடும்பத் தகராறு; 3 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த மனைவி

karnataka vijayapura district husband and wife incident 3 children involved 

Advertisment

கர்நாடகாவில்கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்துஏற்பட்டு வந்த குடும்பத்தகராறு காரணமாக மனைவி தனது மூன்று குழந்தைகளையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் உள்ள விஜயபுரா மாவட்டம் ஜாலகிரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராமு சவுகான். இவரதுமனைவி கீதா (வயது 32).இவர்கள் இருவருக்கும் ஆறு வயதில் ஒரு மகளும், நான்கு மற்றும் மூன்று வயதில் இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், கணவன் மற்றும் மனைவி இடையே தொடர்ந்து குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கீதா விரக்தியில்இருந்து வந்துள்ளார்.

கணவருடன்சேர்ந்து வாழ விரும்பாத கீதா தற்கொலைசெய்து கொள்ளும் முடிவை எடுத்துள்ளார். அப்போது குழந்தைகளை விட்டுப் பிரிய மனமில்லாமல் தனது வீட்டின் அருகே உள்ள தரைமட்டத்தண்ணீர் தொட்டியில் மூன்று குழந்தைகளையும் வீசிக் கொன்றுள்ளார். அதன் பின்னர் தானும் அந்த தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தரைமட்டத்தொட்டியில்குடிநீர் எடுக்கச் சென்ற மக்கள் இதைக்கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணைசெய்து வருகின்றனர்.

police karnadaka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe