yediyurappa

பிரிட்டனில் உருமாறிய கரோனா பரவலைத் தடுக்க, மகாராஷ்ட்ரா மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

Advertisment

இதுதொடர்பாகஅம்மாநிலஅரசு நேற்று வெளியிட்டஅறிவிப்பில், கர்நாடகவில் இன்று முதல்ஜனவரி 2- ஆம் தேதி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்தநிலையில், கர்நாடாக அரசு தற்போது இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா, வல்லுனர்களின் ஆலோசனைப்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாகவும், ஆனால் இரவு நேர ஊரடங்கு தேவையில்லை என்பதுபொதுமக்களின்கருத்தாகஇருப்பதாலும், அமைச்சர்கள், அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு, தற்போது அது திரும்பப் பெறப்படுவதாகக்கூறியுள்ளார்.