Advertisment

அனுமன் கொடி அகற்றம்; பதற்றத்தில் கர்நாடகா!

Karnataka in tension on Removal of Hanuman flag

Advertisment

கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ளகெரகோடுகிராமத்தில் கிராம்பஞ்சாயத்துக்குசொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் 108 அடி உயரத்தில்கொடிக்கம்பம் அமைத்து, அதில் அனுமன் கொடி ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் கிராம பஞ்சாயத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால்,தேசியக்கொடியைத்தவிர, எந்த மத, அரசியல் கொடியையும் ஏற்றக்கூடாது என்று கூறி கிராமப் பஞ்சாயத்து அந்த கோரிக்கை நிராகரித்தது.

இருப்பினும், அந்த கிராம மக்கள் சிலரும், இந்து அமைப்பினரும் சேர்ந்து, அந்த அரசு நிலத்தில் கொடிக் கம்பம் அமைத்து அதில் அனுமன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றினர். இதையறிந்த, மாவட்ட நிர்வாகம், அரசு நிலத்தில் அனுமன் கொடியை அகற்றுமாறு உத்தரவுபிறப்பித்திருந்தது. அதன்படி, அனுமன் கொடியை அகற்றுவதற்காக அதிகாரிகள் நேற்று (28-01-24) அந்தகிராமத்திற்குச்சென்றனர். அப்போது, கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம்,பஜ்ரங்தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள்அங்குசென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்,அங்குபதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு ஏராளமானபோலீசார்பாதுகாப்புக்காகக்குவிக்கப்பட்டனர்.

இருப்பினும், போராட்டம் கலையாததால்போலீசார்தடியடிநடத்திக்கூட்டத்தைக்கலைத்தனர். அதன் பின்னர், அங்கு இருந்த அனுமன் கொடியை அகற்றிவிட்டு அதிகாரிகள் தேசியக்கொடியை ஏற்றினர். இதற்கு இந்து அமைப்பினரும், கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அந்த கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்ததால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதையடுத்து, அனுமன் கொடி அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் உருவாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கர்நாடகா முதல்வர்சித்தராமையா, “தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டிய இடத்தில் அனுமன் கொடி ஏற்றப்பட்டது தற்செயலாக நடந்தது அல்ல. வேண்டுமென்றே விதிகளை மீறி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பா.ஜ.க மற்றும்சங்பரிவார்களின்முன் கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் தான். கர்நாடகா மக்களை மாநில அரசுக்குஎதிராகத்திருப்ப வேண்டுமென்ற நோக்கத்தோடு திட்டமிட்டு போராட்டம் நடத்துகின்றனர்” என்று கூறினார்.

hanuman flag karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe