karnataka temple trustee who beat up woman and chased her away

“ஹே நில்லு... நில்லு... நீயெல்லாம் உள்ள வரக்கூடாது. மரியாதையா இங்கிருந்து வெளிய போ" என நரசிம்மர்கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின பெண்ணைஅறங்காவலர்அடித்து விரட்டும் சிசிடிவி காட்சிமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கர்நாடக மாநிலம் பெங்களூர் சிட்டிக்கு அருகே உள்ளது அமிர்தஹல்லி கிராமம். இந்தப் பகுதியில் பிரசித்தி பெற்ற லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் விசேஷ நாட்களில்ஏராளமான பக்தர்கள் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில், கடந்த டிசம்பர் 21ஆம் தேதியன்றுபட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்இந்த நரசிம்ம சுவாமி கோயிலுக்கு வழிபாட்டுக்காகச் சென்றுள்ளார்.

Advertisment

அந்த சமயம், கோயிலுக்குள் இருந்த அறங்காவலர் முனி கிருஷ்ணா என்பவர், "ஹே நில்லு...நில்லு... நீயெல்லாம் உள்ள வரக்கூடாது. மரியாதையா கோயில விட்டு வெளிய போ" என அந்தப் பெண்ணிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதையெல்லாம்சிறிதளவும் கண்டுகொள்ளாத அந்தப் பெண்,தொடர்ந்து சாமி கும்பிட முயன்றுள்ளார். இதனால்கடுப்பான கோயில் அறங்காவலர், ஒரு பெண் என்றும்பாராமல்பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால்அந்தப் பெண்ணை அடித்து கோயிலை விட்டு விரட்ட முயன்றார்.

அப்போது, அந்தப் பெண்ணை அடித்து கீழே தள்ளிய அறங்காவலர், அவரின் தலைமுடியைப் பிடித்துதரதரவென வெளியே இழுத்துச் சென்றார்.அதுமட்டுமல்லாமல், அந்தப்பெண்ணை, கோயிலில் இருந்து விரட்டிய பிறகும் கோபம் குறையாத அறங்காவலர், அவரை உருட்டுக்கட்டையைக் கொண்டு தாக்கமுயன்றார். அந்த சமயத்தில் அருகில் இருந்தவர்கள்அறங்காவலரைத்தடுத்து நிறுத்தினர்.

Advertisment

இத்தகைய சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண், அறங்காவலர் குறித்து அமிர்தஹல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில்அறங்காவலர் முனி கிருஷ்ணாவை கைது செய்த பெங்களூரு போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கோயிலுக்குள் நுழைந்தபெண்ணை,அறங்காவலர்அடித்து விரட்டும் சிசிடிவி காட்சிவெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- சிவாஜி