கர்நாடக மாநிலத்தில் 35,000க்கும் மேற்பட்ட கோவில்கள் அம்மாநில இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் சம்பள உயர்வு கேட்டு பல ஆண்டுகளாக மாநில அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் கர்நாடக அரசின் 6-வது ஊதிய குழு பரிந்துரையின் அடிப்படையில் அர்ச்சகர்களுக்கு சம்பள உயர்வு உள்பட பல சலுகைகள் வழங்கப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. ஆனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆரத்தி தட்டில் போடும் காணிக்கையை எடுக்கக்கூடாது என்று தடை போட்டுள்ளது.

Advertisment

KARNATAKA TEMPLE PRIEST SUFFER

Advertisment

இது தொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்ட அரசாணையில், கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு 6-வது ஊதிய குழு அடிப்படையில் சம்பள உயர்வு உள்பட பல சலுகைகள் வழங்கப்படும். அதே சமயத்தில் பக்தர்கள் ஆரத்தி தட்டில் போடும் காணிக்கைகளை அர்ச்சகர்கள் எடுத்து பயன்படுத்தாமல் கோயில் வருமானத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசின் உத்தரவால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.