பா.ஜ.க. இளைஞரணி தொண்டர் படுகொலை! 

KARNATAKA STATE BJP YOUTH INCIDENT POLICE INVESTIGATION

கர்நாடகாவில் பா.ஜ.க.வின் இளைஞரணி தொண்டர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் வெடித்துள்ளது.

கர்நாடகா மாநிலம், தக்ஷிணா கன்னடா (Dakshina Kannada) மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் நெட்டாரு என்பவரை பயங்கர ஆயுதங்களால் அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த நிலையில் கிடந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இது குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க.வின் இளைஞரணி தொண்டரின் படுகொலையைக் கண்டித்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, இந்த சம்பவத்திற்கு கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கர்நாடகா முதலமைச்சர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

incident Leader
இதையும் படியுங்கள்
Subscribe