கர்நாடகா அரசு கவிழுமா? நீடிக்குமா? நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கூட்டணியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் கால தாமதம் செய்து வருவதால், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

karnataka resign mlas case supreme court announced judgement for tomorrow

அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில்இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தனர். ஏற்கனவே சபாநாயகர் ரமேஷ் குமார் கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் வியாழக்கிழமை நடைபெறும் நிலையில், உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருப்பது. கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதல்வர் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கர்நாடகா அரசு நீடிக்குமா? கவிழுமா? என்பது நாளை உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பில் தெரியவரும்.

CM HD KUMARASAMY government related case India Karnataka Government supreme court announced judgement state
இதையும் படியுங்கள்
Subscribe