கர்நாடகாவில்ஆட்சி செய்து வரும்பாஜகதலைமையிலானஅரசு கடந்த ஆண்டு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்குதடை விதித்திருந்தது. இதனால் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் ஏராளமான மாணவிகள் வகுப்புகள் மற்றும் தேர்வுகளைப் புறக்கணித்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு கர்நாடகமாநில பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற 12 ஆம் வகுப்புபொதுத்தேர்வுக்கான முடிவுகள்கடந்த 21 ஆம் தேதி வெளியாகின.பெங்களூருவில் உள்ள ஒரு சி.பி.எஸ்.சி. பள்ளியில் பயின்ற தபசம் ஷேக் என்ற இஸ்லாமியமாணவி பல்வேறு தடைகளையும் தாண்டிகலைப்பிரிவில் 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும் மாணவிதபசம் ஷேக்ஹிந்தி, உளவியல் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றும் சாதனை படைத்துள்ளார். தற்போது மாணவியைபல்வேறு பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.