கர்நாடக அரசியலில்உச்சகட்ட குழப்ப நிலை நிலவி வரும் சூழலில், ஆளும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யப்போகிறார்கள் என காங்கிரஸ் எம்.பி சுரேஷ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

karnataka political crisis

தொடர்ந்து மஜக, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து எம்.எல்.ஏ க்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ நாகேஷ் இன்று காலை பதவி விலகியுள்ளார். இது ஆளும் காங்கிரஸ், மஜககூட்டணிக்கு மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி யான சுரேஷ், விரைவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என அறிவித்துள்ளார். இந்த பரபரப்பான சூழலில் பாஜக முக்கிய தலைவர்கள் எடியூரப்பா வீட்டிலும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் அம்மாநில துணை முதல்வர் பரமேஸ்வரா வீட்டிலும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.