நாடு முழுவதும் அதிகப்படியான வெப்பம் நிலவி வரும் நிலையில் தண்ணீர் பஞ்சமும் உச்சத்தை எட்டியுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் மழை வர வேண்டி பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கர்நாடக மாநிலத்தின் உடுப்பி பகுதியில் மழை வருவதற்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட உடைகள் உடுத்தி இரு தவளைகளுக்கும்திருமணம் நடந்தது. இதனையடுத்து அங்கு நல்ல மழை பொழியும் என அப்பகுதி மக்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.