உடுப்பி பெஜாவர் மடம் விஸ்வேஷா தீர்த்தசுவாமி காலமானார்!

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் பெஜாவர் மடம் விஸ்வேஷா தீர்த்தசுவாமி உடல் நலக்குறைவால் காலமானார்.

உடல் நலக்குறைவால் பெஜாவர் மடம் விஸ்வேஷா தீர்த்தசுவாமி கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உஜூபி ஸ்ரீ கிருஷ்ணா மடத்திற்கு பெஜாவரா மடம் சீர் விஸ்வேஷா தீர்த்த சுவாமி மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Karnataka  Pejavara Mutt Seer Vishwesha Teertha Swami incident pm narendra modi

விஸ்வேஷா தீர்த்தசுவாமி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் விஸ்வேஷா தீர்த்த சுவாமியிடமிருந்து கற்றுக்கொள்ள பல வாய்ப்புகள் கிடைத்தது எனது பாக்கியம்.உடுப்பி மக்களின் வழிகாட்டும் ஒளியாக இருந்த சுவாமிஜி மக்களின் மனதிலும் நிலைத்திருப்பார் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா,குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர் மேலும் முன்னாள் மத்திய அமைச்சர்கள்,பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் விஸ்வேஷா தீர்த்தசுவாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

karnataka Pejavara Mutt Seer Vishwesha Teertha Swami PM NARENDRA MODI udupi
இதையும் படியுங்கள்
Subscribe