கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13ஆம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்றுவருகிறது. பசவராஜ் பொம்மை முதல்வரான பிறகு கூடியுள்ள இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்முதல் நாளன்று, கர்நாடக எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸைச் சேர்ந்த சித்தராமையாவும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமாரும்ஏனைய காங்கிரஸ் தலைவர்களும் சட்டமன்றத்திற்கு மாட்டு வண்டியில் வந்துஎரிபொருள் மற்றும் எல்எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின்விலை உயர்வு ஆகியவற்றுக்குதங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இந்தநிலையில்இன்று (20.09.2021)சித்தராமையாவும், சிவகுமாரும்ஏனைய காங்கிரஸ் தலைவர்களோடு சட்டமன்றத்திற்கு மிதிவண்டியில் வந்து, எரிபொருள் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின்விலை உயர்வு ஆகியவற்றுக்கு மீண்டும் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.
கர்நாடக சட்டசபையில் கடந்தவாரத்தில்,எரிபொருள் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின்விலை உயர்வு குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. இந்த விவாதங்களுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த வாரம் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.