நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில், விவசாயிகள் ஆயுதம் ஏந்தி வெங்காய பயிர்களுக்கு பாதுகாப்பு அளித்து வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Advertisment

karnataka onion farmers preventing their fields

வெங்காய கிடங்கில் பணத்தை திருடுவதை விடுத்து வெங்காயத்தை திருடும் அளவுக்கு வெங்காய விலை இன்றைய சூழலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே வட மாநிலங்களில் வெங்காய கிடங்குகளை பாதுகாப்பு வழக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றன. தற்போது கர்நாடகாவில் வெங்காய விவசாயிகள் ஆயுதங்கள் ஏந்தி வெங்காயபயிர் நிலத்திற்குபாதுகாப்பு அளித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் வெங்காயம் விளைச்சலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது பயிரை 24 மணி நேரமும் பாதுகாத்து வருகின்றனர். மேலும் இரவில் யாரேனும் வெங்காயத்தை திருவிடாமல் இருக்க இரவு முழுவதும் பயிர் நிலத்தில் கம்பு மற்றும் அரிவாள் ஆகியவற்றுடன் பல இடங்களில் நின்று பாதுகாத்து வருகின்றனர்.