கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா இராஜினாமா செய்வார் என நீண்ட நாட்களாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் நேற்று (26.07.2021) தனது பதவியை இராஜினாமா செய்தார். இராஜினாமா செய்தஎடியூரப்பாவை கர்நாடக ஆளுநர், புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும்வரை காபந்து முதல்வராக பொறுப்பு வகிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, கர்நாடகாவின் அடுத்த முதல்வரைத் தேர்வுசெய்யும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கர்நாடகாவின்அடுத்த முதல்வரைகட்சியின் நாடாளுமன்றக் குழு தேர்ந்தெடுக்கும் என கர்நாடகா பாஜகவின் மேலிட பொறுப்பாளர் நேற்று தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில்நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகுமத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தான் கர்நாடகா செல்லப்போவதாகவும், அங்கு அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாகவும், இதில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி கர்நாடகாவின்புதிய முதல்வர் வரும்வியாழக்கிழமைக்குள்பதவியேற்பார் எனவும்தகவல் வெளியாகியுள்ளது.