இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. இதில் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு நதிநீர் பங்கீடு குறித்து விவாதித்தனர். அதன்படி ஜூன் மாதம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 9.2 டி.எம்.சி தண்ணீரையும் கர்நாடக சரியாக வழங்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்து கலந்தாலோசித்து விரைவில் முடிவெடுப்போம் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கர்நாடகாவில் எங்கள் உபயோகத்திற்கு போதிய நீர் இருக்கும் பட்சத்தில், மீதத்தை கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளார்.