karnataka

Advertisment

இந்தியாவில் கரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநிலத்திலும் தினசரி கரோனாபாதிப்பு ஐம்பதாயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்று ஒரேநாளில் அம்மாநிலத்தில் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாஉறுதியானது. இருப்பினும் அம்மாநிலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்களின்எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது.

இதனையடுத்துகர்நாடக அரசு, வார இறுதி ஊரடங்கை ரத்துசெய்துள்ளது. நிபுணர்களின் அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின்எண்ணிக்கை அதிகரித்தால், மீண்டும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கர்நாடக மாநில அமைச்சர்அசோக் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில்இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பிற கட்டுப்பாடுகள் தொடரும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.