அரசு நிதியை தவறாக பயன்படுத்த ஒப்புதல் அளிக்காததால் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

karnataka ias officer rohini sindhuri transfered

கர்நாடக மாநில பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ரோகினி சிந்தூரி, கர்நாடகாவின் கட்டிட தொழிலாளர் அமைப்பின் செயலாளராக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் இந்தப் பதவியிலிருந்து அவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரின் இந்த திடீர் பணியிடை மாற்றத்திற்கான காரணம் குறித்து பிரபல நாளிதழ் ஒன்று காரணத்தை வெளியிட்டுள்ளது.

Advertisment

அதன்படி, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் கட்டுபாட்டில் உள்ள கட்டிட தொழிலாளர் அமைப்பில் ரோகினி செயலாளராக இருந்துள்ளார். அப்போது, ஒரு சில ஒப்பந்தங்களை கர்நாடக மாநில மின்சார வளர்ச்சி வாரியத்திற்கு டேண்டர் இல்லாமல் தரும்படி அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும், ரோகினி அதற்கு மறுப்பு தெரிவித்து டெண்டர் முறை மூலம் ஒப்பந்தத்தை வேறு நிறுவனத்திற்கு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் தற்போது பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இவர் கர்நாடக மாநிலத்தின் ஹசன் மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையராக இருந்தப் போது அமைச்சர்கள் மஞ்சு மற்றும் ஹெச்.டி.ரேவன்னா ஆகியோரின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட மறுத்து, அந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisment