கன்னட சினிமா நட்சத்திரமானபுனித் ராஜ்குமாருக்குஇன்று காலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்துமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.
புனித் ராஜ்குமாரின்மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்கர்நாடகா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளை மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு வருகின்றன. கர்நாடக போலீஸார்தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.