கர்நாடகாவில் ஆளும் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா எதிரொலியால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளகட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேருடன் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இருப்பினும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று நடைபெற்ற கர்நாடகா சட்டப்பேரவை கூட்டத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி பாஜக தலைவர்கள் சபாநாயகருக்கு கடிதம் அளிக்க உள்ளனர்.

Advertisment

Advertisment

KARNATAKA GOVERNMENT VERY CRISIS CM HD KUMARASAMY CONTINUE DISCUSSION WITH RESIGN MLAS

இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் மும்பை, கோவா ஆகிய இடங்களில் சொகுசு விடுதியில் தங்கியுள்ள நிலையில், கர்நாடகாவில் உள்ள மற்ற ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்படுள்ளன. அதே போல் பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏக்களும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏக்கள் நேற்று விடுதியில் உள்ள மைதானத்தில் கூலாக கிரிக்கெட் விளையாடினர். கர்நாடகாவில் அரசியல் பரப்பரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக எம்.எல்.ஏக்கள் சொகுசு விடுதியில் கூலாக விளையாடியது. ஆளும் கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.