Advertisment

கவிழ்ந்தது கர்நாடக அரசு! பதவி விலகுகிறார் குமாரசாமி!! 

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாக, சட்டப்பேரவையில் பேசி வரும் முதல்வர் குமாரசாமி. கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும், நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். பதவி விலக தயார் என முதல்வர் குமாரசாமி அறிவித்த நிலையில், கர்நாடகா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.

Advertisment

KARNATAKA GOVERNMENT DISQUALIFIED FLOOR TEST RESULT

இதனையடுத்து எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் எழுந்து நிற்கும் அடிப்படையில், ஆளும் கட்சிக்கு எத்தனை உறுப்பினர்கள் ஆதரவு என்பதை சட்டப்பேரவை செயலர் கணக்கிடும் பணியை மேற்கொண்டுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் மும்பையில் தங்கியுள்ள நிலையில், வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் குரல் வாக்கெடுப்பு, பகுதி வாக்கெடுப்பு என இரண்டு முறையில் நடைபெற்றது. கர்நாடக அரசு கவிழ்ந்தது என சபாநாயகர் அறிவிப்பு.அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகள், அரசுக்கு எதிராக 105 வாக்குகளும் பதிவாகியுள்ளது

Advertisment

CM HD KUMARASAMY resign dissolve Karnataka Government
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe