Advertisment

மகிழ்ச்சியாக விடைபெறுகிறேன்-  குமாரசாமி உருக்கம்!

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தின் முதல்வர் குமாரசாமி உருக்கமாக பேசி வருகிறார். அதில் தந்தையின் அழுத்தம் காரணமாக அரசியலுக்கு வந்தேன். காங்கிரஸ் மற்றும் ம.ஜ.க கூட்டணி ஆட்சி அமைத்த நாள் முதல் பாஜக கட்சி குதிரை பேரத்தை தொடங்கியது. என்னுடைய ஆட்சியில் பணியாற்றி அரசு ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

Advertisment

KARNATAKA GOVERNMENT CM HD KUMARASAMY SAID ALL GOVERNMENT EMPLOYEES THANKS

நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். மகிழ்ச்சியாக விடைபெறுகிறேன் என்று தனது ராஜினாமா குறித்த முடிவை சூசகமாக அறிவித்தார் முதல்வர் குமாரசாமி. இதற்கிடையே கர்நாடகாவில் நிலவி வரும் குழப்பமான சூழலில் பெங்களூர் முழுவதும் அனைத்து கடைகளையும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு 144 தடை உத்தரவை அறிவித்தது. இன்றையசட்டப்பேரவை கூட்டத்தொடர்இறுதியில் தனது ராஜினாமா முடிவை முதல்வர் குமாரசாமி அறிவிக்க உள்ளார்.

Speech CM HD KUMARASAMY ASSEMBLY AT BANGALORE Karnataka Government India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe