கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் சோமசேகர், ரமேஷ் லக்ஷ்மன் ராவ், ஆனந்த் சிங், சுதாகர், பஸவராஜா, சிவராம், சென்னபசவனகவுடா பாட்டீல், கோபாலய்யா, நாராயண கவுடா, பாலாசாகேப் பாட்டீல் உள்ளிட்ட 10 எம்.எல்.ஏக்கள் அமைச்ச்சர்களாக பதவியேற்கின்றனர்.34 பேர் கொண்ட கர்நாடக அமைச்சரவையில் முதல்வர் எடியூரப்பாவுடன் சேர்த்து ஏற்கனவே 18 பேர் அமைச்சர்களாக உள்ளன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மேலும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ள 10 பேரும், மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தனர். பின்பு இந்த 10 பேருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு வழங்கியிருந்தது. அந்த தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றதையடுத்து அமைச்சர்களாக பதவியேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களுருவில் உள்ள ராஜபவனில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் விழாவில் பத்து எம்.எல்.ஏக்களுக்கும் ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வருகிறார். இந்த விழாவில் முதல்வர் எடியூரப்பா, பாஜக கட்சியின் மூத்த தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.