கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று மாலை 07.30 மணியளவில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதல்வர் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், அரசுக்கு எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அரசுக்கு எதிராக உறுப்பினர்கள் அதிகளவில் வாக்களித்ததால், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அதனை தொடர்ந்து குமாரசாமி நேற்று இரவு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார். குமாரசாமியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுருந்தது. இந்நிலையில் ஆறு வாக்குகள் வித்தியாசத்தில் அரசு கவிழ்ந்ததால், முன்னாள் முதல்வர் குமாரசாமி, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisment

karnataka floor test not participate bsp party mla mahesh suspended announced party president mayavati

Advertisment

கர்நாடகாவில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த மகேஷ் கொல்லேகல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் முந்தைய குமாரசாமி அரசுக்கு, தனது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ மகேஷ், ஆதரவு அளிப்பார் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மகேஷ் எம்.எல்.ஏ முன்னாள் முதல்வர் குமாரசாமி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த நிலையில், நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் குமாரசாமி அரசுக்கு மறைமுக எதிர்ப்பை தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, கட்சி தலைமை உத்தரவிட்டும், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத மகேஷ் எம்.எல்.ஏவை கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.