கர்நாடக முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த் நேற்று இரவு திடீரென மாயமாகியுள்ளது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
நேற்று சிக்மகளூரு வழியாக கேரளா செல்ல திட்டமிட்ட நிலையில், திடீரென அவர் மாயமாகி உள்ளார். சிக்மகளூருவுக்கு காரில் சென்ற சித்தார்த், அருகில் உள்ள ஜேப்பினா மோகரூ என்ற இடத்தில் காரை விட்டு இறங்கி போனில் பேசியபடியே நடந்து சென்றுள்ளார். அரைமணி நேரம் ஆகியும் அவர் திரும்ப காருக்கு வராததை அடுத்து அவரது ஓட்டுநர் அவரது செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்துள்ளது.
இதனையடுத்து ஓட்டுநர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் போலீசாருக்கு அளித்த புகாரை தொடர்ந்து காவல்துறை துணை ஆணையர்கள் ஹனுமந்தராயா மற்றும் லட்சுமி கணேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி, தேடுதல் பணியை விரைவு படுத்தியுள்ளனர்.
ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் நேத்ராவதி ஆற்றுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று காலை எஸ்.எம்.கிருஷ்ணா இல்லத்திற்கு அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சென்று ஆலோசனை நடத்தியுள்ளார். தற்போது மாயமாகியுள்ள சித்தார்த், இந்தியா முழுவதும் பிரபலமான காபி டே கஃபே -வின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.