ops eps 333.jpg

கர்நாடக மாநிலத்தில் 12-5-2018 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காந்தி நகர், ஹனூர், கோலார் தங்கவயல் (தனி) ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து பெறப்பட்ட விருப்ப மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இதுதொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Advertisment

அதில், அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, கர்நாடக சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக எம்.பி.யுவராஜ் (காந்தி நகர்), ஆர்.பி.விஷ்ணுகுமார் (ஹனூர்) மற்றும் மு. அன்பு (கோலார் தங்கவயல்) ஆகியோர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.