Advertisment

எனது ஜாதி காரணமாக மூன்று முறை முதலமைச்சர் பதவி மறுக்கப்பட்டது; கர்நாடக துணை முதல்வர் பரபரப்பு...

karnataka dy cm on dalit controversy

கர்நாடகமாநிலத்தின் துணை முதல்வராக உள்ள பரமேஸ்வரா நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய போது, "தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதாலேயே நான் மூன்று முறை முதலமைச்சர் வாய்ப்பை இழந்தேன். மேலும் பசவலிங்கப்பா, கே.எச். ரங்கநாதன், என் மூத்த சகோதரர் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோரும் இந்த காரணத்தால் முதலமைச்சர் பதவியை தவறவிட்டனர். நானும் இதனால் முதலமைச்சர் பதவியை மூன்று முறை இழந்தேன். காங்கிரஸ் கட்சியில் ஒரு சிலர் தாழ்த்தப்பட்ட சாதியினர் மேலே வரக்கூடாது என நினைக்கின்றனர். இந்த முறையே பல குழப்பங்களுக்கு பிறகு தான் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்" என கூறினார்.

Advertisment

இது கர்நாடக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலில் இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறும்போது, "காங்கிரஸ் கட்சி தாழ்த்தப்பட்ட சமூகம் மற்றும் ஏனைய புறக்கணிக்கப்பட்ட பிரிவுகளின் சமூகத்தை தனி அக்கறையோடு கவனித்து வருகிறது. அவர் எந்த சூழ்நிலையில் அப்படி பேசினார் என எனக்கு தெரியாது. நீங்கள் அவரிடம் தான் இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டும்" என கூறினார். ஒரு மாநில துணை முதல்வரின் இப்படிப்பட்ட பேச்சு கர்நாடக அரசியலில் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Siddaramaiah congress karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe