Advertisment

'அரசியல் கொலை'- சட்டமேலவை துணைத் தலைவர் மரணம்  குறித்து முன்னாள் முதல்வர் குற்றசாட்டு!

dharmegowda

கடந்த டிசம்பர் 15- ஆம் தேதி பா.ஜ.க.வினர் பசுவதைத் தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற சபாநாயகர் பிரசாத் சந்திரஷெட்டி (காங்கிரஸ்) வரும் முன் கர்நாடக சட்டமேலவை சபாநாயகர் இருக்கையில் எஸ்.எல்.தர்மேகவுடாவை அமரவைத்தனர். பா.ஜ.க. உறுப்பினர்கள் அமர வைத்த தர்மேகவுடாவை இருக்கையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக இழுத்தனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இந்த நிலையில் கர்நாடக மாநில சட்டமேலவையின் துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடாவின் உடல் சிக்மகளூரு அருகே கடூரில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டது. உடல் கைப்பற்றப்பட்ட இடத்தில் இருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.எல்.தர்மேகவுடாவின் மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது அதிர்ச்சியையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

தர்மேகவுடாசடலமாக கண்டெடுக்கப்பட்டது குறித்துகர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளத்தின்தலைவருமான குமாரசாமி, "இன்று நடந்தது ஒரு அரசியல் கொலை. அவரது மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்த உண்மை விரைவில் வெளிவர வேண்டும்" என கூறியுள்ளார்.

CONGRESS AND JDS karnataka
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe