கர்நாடக துணை முதல்வர் அஷ்வத் நாராயணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் துணை முதல்வராகப் பதவிவகித்து வருகிறார் அஷ்வத் நாராயண். இவருக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ள அவர், "சட்டசபை கூட்டத்தொடர் வரவுள்ள நிலையில், நான் கரோனா பரிசோதனை மேற்கொண்டேன்.
அதன் முடிவில் எனக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு அறிகுறிகள் எதுவுமில்லை. எனவே, நான் வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறேன். என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.