Skip to main content

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு 'கரோனா'  

Published on 03/08/2020 | Edited on 03/08/2020
photographer (11)

 

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்து ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனக்கு கரோனா தொற்று இருப்பதாக ட்விட்டர் அவர் மூலம் தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருதாகவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார். 

Next Story

“பெண்கள் தாலியை இழக்க நேரிடும்” - சித்தராமையா மகன் பரபரப்பு கருத்து

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Siddaramaiah son If BJP comes to power, women will lose their thali

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

Siddaramaiah son If BJP comes to power, women will lose their thali

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தை கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார்.

இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. ஆனால், பாஜக ஆதரவாளர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேசிய பழைய வீடியோ ஒன்றை கட் செய்து சமூக வலைத்தளங்களில் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் தங்கள் தாலியை இழக்க நேரிடும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மகனுமான யதீந்திரா சித்தராமையா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

Siddaramaiah son If BJP comes to power, women will lose their thali

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மகனும், கர்நாடகா எம்.எல்.ஏவுமான யதீந்திரா நேற்று (22-04-24) மைசூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடி ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து மிகவும் இழிவாக பேசியுள்ளார். மத உணர்வைகளை தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். தேர்தல் ஆணையம் ஏன் கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறது என்று தெரியவில்லை. 70 ஆண்டுகளாக பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஒரு இந்துக்களுக்கும் அநீதி ஏற்படவில்லை.

பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்துப் பெண்கள் தங்களது தாலியை இழப்பது மட்டுமல்லாமல், அனைத்து தாய்மார்களும் தங்கள் கணவனை இழக்க நேரிடும். பெண்கள் எந்த மதத்தையும் பொருட்படுத்தாமல் கணவன் மற்றும் குழந்தைகளை இழக்க நேரிடும். பா.ஜ.க நாட்டில் வகுப்புவாத வன்முறையை உருவாக்குகிறது. அவர்கள் மக்களை மத அடிப்படையில் போராட வைக்கிறார்கள். போராடுவதன் மூலம் மக்கள் தங்கள் உயிரை இழக்கிறார்கள். அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பெற்று, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தவில்லை.