உட்கட்சி பூசல்; அப்பல்லோ மருத்துவமனையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ...

sftbgrs

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த் சிங் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் நடைபெற்றுவரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் அந்த மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ க்களுக்கு இடையிலேயே மோதல் வெடித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து வந்த இந்த மோதலானது தற்போது கைகலப்பாக மாறியுள்ளது.இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ், ஆனந்த் சிங் மற்றும் பீமா நாயக் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் ஆனந்த் சிங் தாக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாககாங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

congress karnataka
இதையும் படியுங்கள்
Subscribe