karnataka cm siddaramaiah door open viral video

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாநில நலனுக்காகவும் மக்கள் நல மேம்பாட்டுக்காகவும் காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைத்தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

Advertisment

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தின் மேற்கு பக்கத்தில் கதவு ஒன்று உள்ளது. மேலும் வாஸ்து காரணம் காட்டி பல ஆண்டுகளாக இந்த கதவைப் பூட்டி வைத்திருந்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த நுழைவாயில் பயன்படுத்தப் படாமலும் இருந்து வந்துள்ளது.

Advertisment

இதனைக் கவனித்த முதல்வர் சித்தராமையா இன்றுதனது அறையில் மூடப்பட்டிருந்த மேற்கு பக்கக் கதவைத்திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கதவுகள் திறக்கப்பட்டன. மேலும் உடனடியாக அந்தக் கதவின் வாயில் வழியாகவே நுழைந்து தனது அறைக்குச் சென்றார். தற்போதுஇந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.