Skip to main content

முதல்வர் வீட்டுப் பெண்களை இழிவு செய்த பா.ஜ.க. பிரமுகர் கைது! 

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

Karnataka CM Issue BJP Sagunthala Nataraj arrested by police

 

கர்நாடகா மாநிலம் உடுப்பி டவுன் அம்பலவாடி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த கல்லூரியில் படித்து வந்த 3 மாணவிகள் சேர்ந்து கழிவறையில் செல்போன் கேமரா மூலம் சக மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர். மேலும், இந்த வீடியோவை அந்த மாணவிகள் கல்லூரியில் படிக்கும் ஆண் நண்பர்களின் வாட்ஸ்அப் குழுவிற்கு அனுப்பி வைத்தனர் எனச் செய்திகள் பரவின. இது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 

இந்த விவகாரத்தை அறிந்த கல்லூரி நிர்வாகம், இந்த விவகாரத்தில் 3 மாணவிகளை உடனடியாக கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது. 

 

இந்த சம்பவத்துக்கு,  பா.ஜ.க, இந்து அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல், இது குறித்து விசாரணை நடத்தி உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில், ஆபாசமாக வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக உடுப்பி காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ள 3 மாணவிகள் மீது ஆபாசமாக வீடியோ எடுத்து பெண்ணை அவமதித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Karnataka CM Issue BJP Sagunthala Nataraj arrested by police

 

அதேசமயம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, “நான் யாரையும் பாதுகாக்கும் நோக்கத்தில் இங்கு வரவில்லை. தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார் வந்ததால் விசாரணை மேற்கொண்டேன். இந்த வழக்கில் வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். போலி வீடியோ, தகவல்களுக்கு இடமளிக்கக் கூடாது. போலீஸ் விசாரணையில் கழிவறையில் ரகசிய கேமரா மற்றும் செல்போன் கேமரா வைக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. கேமரா பொருத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் வதந்தி பரவி வருகிறது. தவறான வீடியோக்கள் சுற்றி வருகின்றன. இந்த வழக்கில் தேசிய மகளிர் ஆணையம் இறுதி முடிவுக்கு வரும். அதுவரை வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்'' என்றார். இருந்தபோதும், இந்த விவகாரத்தில் சர்ச்சையான கருத்துகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.

 

congress

 

இது தொடர்பாக, கர்நாடகா காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில்,  “இதை ஒரு சிறு சம்பவமாகத் தான் பார்க்க வேண்டுமே தவிர இதை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது. அரசை எதிர்க்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பா.ஜ.க தற்போது பாத்ரூம் அரசியலுக்கு சென்றுவிட்டது. குழந்தைகளின் செயல்பாடுகளை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி வருகிறார்கள்” என்று  கருத்து தெரிவித்திருந்தது.

 

Karnataka CM Issue BJP Sagunthala Nataraj arrested by police

 

இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் பா.ஜ.க பிரமுகர் சகுந்தலா நடராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸின் கூற்றுப்படி முஸ்லிம் இளம் பெண்கள் கழிவறையில் கேமராவை வைத்து இந்து பெண்ணை விளையாட்டாக வீடியோ எடுத்தனர் என்று வைத்துக்கொள்வோம். சித்தராமையாவின் வீட்டுப் பெண்களை இதுபோன்று வீடியோ எடுத்தால் அதை குழந்தைகளின் விளையாட்டாக ஏற்பீர்களா?” என்று சித்தராமையாவை டேக் செய்து ட்விட் செய்திருந்தார்.

 

Karnataka CM Issue BJP Sagunthala Nataraj arrested by police

 

அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க பிரமுகர் கருத்து தெரிவித்தது தொடர்பாக பெங்களூர் ஹை கிரவுண்ட் காவல் நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பா.ஜ.க பிரமுகர் சகுந்தலா நடராஜ் மீது வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்து  இருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.