ADVERTISEMENT

கர்நாடக பாஜகவில் தொடரும் அதிருப்தி... தீர்க்கும் முயற்சியில் முதல்வர்! 

11:40 AM Aug 09, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்வார் என நீண்டநாட்களாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் கடந்த 26ஆம் தேதி, தனது பதவியை ராஜினாமா செய்தார். எடியூரப்பாவின் ராஜினாமாவிற்கு அம்மாநில பாஜகவில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் முக்கிய காரணமாக கூறப்பட்டது.

இதனையடுத்து, கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கடந்த 28ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து கடந்த நான்காம் தேதி, கர்நாடகாவின் புதிய அமைச்சரவை பதவியேற்றது.

இந்தநிலையில், புதிய அமைச்சரவையில் அமைச்சர் பதவி கிடைக்காதவர்களும், தங்களுக்கு விரும்பிய பதவி கிடைக்காதவர்களும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் இரகசியக் கூட்டம் நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், தனக்கு ஒதுக்கப்பட்ட இலாகா குறித்து வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்த அமைச்சர்கள் எம்.டி.பி. நாகராஜையும், ஆனந்த் சிங்கையும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சந்தித்ததோடு, அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமைச்சரவையில் இடம் கிடைக்காத எம்.எல்.ஏ. சதீஷ் ரெட்டியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சதீஷ் ரெட்டியையும் பசவராஜ் பொம்மை சந்தித்தார். இவ்வாறு அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த பசவராஜ் பொம்மை முயன்றுவரும் நிலையில், நாளை (10.08.2021) அப்பாச்சு ரஞ்சன் என்ற எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் பெங்களூரு நோக்கி பேரணி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தியாளர்களை சமாளிப்பது கர்நாடக பாஜக தலைமைக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT