"மேகதாது அணை விவகாரம்- அண்டை மாநிலங்கள் எதிர்க்க வேண்டாம்"- கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா வேண்டுகோள்!

karnataka chief minister pressmeet at delhi

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க டெல்லி சென்றுள்ள கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா இன்று (16/07/2021) மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேகதாது அருகே அணை கட்டுவது கர்நாடகா மாநிலத்தின் உரிமை என்பதால் உரிய அமைப்புகள் மற்றும் ஆணையங்களுடன் ஏற்கனவே ஆலோசித்து அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். அணை விவகாரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுகிறேன். இந்த விவகாரம் தமிழ்நாடு, கர்நாடகாவை பாதிக்கும். மேகதாது அணைக்கு அனுமதிக் கேட்பதற்காக பிரதமரைச் சந்தித்துக் கோரிக்கை விடுக்க உள்ளேன்" எனத் தெரிவித்தார்.

chief minister CM YEDIYURAPPA Delhi karnataka
இதையும் படியுங்கள்
Subscribe